Thursday 1 September 2011

சிவகாசியில் பட்டாசு விலை உயரும் அபாயம்

விருதுநகர் : பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு பண்டிகை சமயத்தில் பட்டாசுகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீன பட்டாசுகளால் போட்டி அதிகரித்துள்ளதன் காரணமாக அதிக முதலீட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை குறைந்த விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பட்ஜெட்டில் பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட பட்டாசு மூலப் பொருட்களின் இறக்குமதி விலையை உயர்த்தி உள்ளதால் பட்டாசுகளின் விலையை உயர்த்த பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தமிழக பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு டன் பேரியம் நைட்ரேட் விலை ரூ.19000 லிருந்து ரூ.55,000 க்கு இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று பொட்டாசியம் நைட்ரேட் விலையும் ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் 75 சதவீதம் ஆர்டர்களை மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment