Friday 22 June 2012

வைகை புயல் வடிவேலு அண்ணே தமிழ் சினிமாவிற்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.....கலாய்த்தல் என்கிற பெயரில் சந்தானத்தின் மொக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தாங்க முடியாத ஒன்றாக உள்ளது....சந்தானம் நடிச்ச கடைசி அஞ்சாறு படங்கள்ல நல்லா பாருங்க சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ற மாதிரி வரும்...இப்பவே சலிப்பு தட்ட ஆரம்பிச்சிருச்சு.....ஆகவே எங்கள் அண்ணன் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்ப விழைகிறோம் !
"முடிச்ச அவுக்குறது சுவாராசியம்னா அவுக்க முடியாத முடிச்ச போடுறது அதவிட  சுவாராசியம்"....

சகுனி---வழக்கமான அரசியல் கதை..

அரசியல் படம் அப்டிங்கிறதால கொஞ்சம் அதிக எதிர்பார்ப்போடவே போனேன்...ஆனா வழக்கமான கதைய கொஞ்சம்கூட மாற்றம் இல்லாம திரைக்கதைல காமெடி,ரோமென்ஸ் மசாலா தூவி டைரக்டர் கொடுத்துருக்கார்....சோ அது கொஞ்சம் நிறையவே ஏமாற்றம் தான்.....

இந்த படத்துல சொல்லிருக்குற எல்லாமே ஏற்கனவே தமிழ் சினிமால வந்துருக்கு....ஆனா என்னனா இன்னிக்கு நாட்ல எல்லாமே அப்டியே நடக்குறதால நமக்கு என்னமோ புதுசா பாக்குற மாதிரி ஒரு பீலிங் வரலாம் (மே பி)...

படத்துல ஹீரோ செய்யுற சகுனி வேலையெல்லாம் நடைமுறைல சாதியமான்னு தெரில?? கொஞ்சமாவது நாட்டுக்கு இன்னிக்கு பொருந்துற மாதிரி படம் எடுத்தா நல்லா இருக்கும்....

டைரக்டர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு மசாலாவ கொறச்சு விசயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துருக்கலாம்.....ஆகா மொத்ததுல இதுவும்  கார்த்தியின் மற்றொரு மசாலா விருந்து இந்த முறை அரசியல் களத்தில்....